Shanmugan Murugavel / 2024 ஜூலை 23 , பி.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கு எதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான இலங்கைக் குழாமில் தினேஷ் சந்திமால் இடம்பெற்றுள்ளார். அந்தவகையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான குழாமில் சந்திமால் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை அஞ்சலோ மத்தியூஸ், தனஞ்சய டி சில்வா, சதீர சமரவிக்கிரம, டில்ஷான் மதுஷங்க ஆகியோர் குழாமில் இடம்பெறவில்லை.
இந்நிலையில் குசல் பெரேரா, அவிஷ்க பெர்ணாண்டோ, பினுர பெர்ணாண்டோ ஆகியோர் குழாமுக்கு மீளத் திரும்பியுள்ள நிலையில் சகலதுறைவீரரான சமிந்து விக்ரமசிங்க முதன்முறையாகக் குழாமில் இடம்பெற்றுள்ளார்.
இதேவேளை வனிது ஹசரங்க பதவி விலகிய நிலையில் சரித் அசலங்க அணித்தலைவராகப் பெயரிடப்பட்டுள்ளார்.
குழாம்: சரித் அசலங்க (அணித்தலைவர்), பதும் நிஸங்க, குசல் பெரேரா (விக்கெட் காப்பாளர்), அவிஷ்க பெர்ணாண்டோ, குசல் மென்டிஸ் (விக்கெட் காப்பாளர்), தினேஷ் சந்திமால், கமிந்து மென்டிஸ், தசுன் ஷானக, வனிது ஹசரங்க, டுனித் வெல்லலாகே, மகேஷ் தீக்ஷன, சமிந்து விக்ரமசிங்க, மதீஷ பத்திரண, நுவான் துஷார, துஷ்மந்த சமீர, பினுர பெர்ணாண்டோ.
9 minute ago
21 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
21 minute ago
33 minute ago