Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Shanmugan Murugavel / 2021 ஜனவரி 07 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், சிட்னியில் நேற்று ஆரம்பமான மூன்றாவது டெஸ்டின் இன்றைய முதல் நாள் முடிவில் அவுஸ்திரேலியா முன்னிலையில் காணப்படுகின்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணியின் தலைவர் டிம் பெய்ன், தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.
அவுஸ்திரேலியா சார்பாக வில் புக்கொவ்ஸ்கி அறிமுகத்தை மேற்கொண்டு கடந்த டெஸ்டில் விளையாடிய ட்ரெவிஸ் ஹெட்டைப் பிரதியிட்ட நிலையில், ஜோ பேர்ண்ஸை டேவிட் வோணர் பிரதியிட்டிருந்தார்.
இந்தியா சார்பாக கடந்த போட்டியில் விளையாடிய உமேஷ் யாதவ்வைப் பிரதியிட்ட நவ்தீப் சைனி, டெஸ்ட் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொண்டதுடன், மாயங்க் அகர்வாலை ரோஹித் ஷர்மா பிரதியிட்டிருந்தார்.
முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய அவுஸ்திரேலியா, ஆரம்பத்திலேயே வோர்னரை மொஹமட் சிராஜ்ஜிடம் இழந்திருந்தது. அதன்பின்னர் புக்கொவ்ஸ்கி, மர்னுஸ் லபுஷைன் இணைந்து இனிங்ஸை கட்டியெழுப்பியிருந்தனர்.
பின்னர் றிஷப் பண்ட் இரண்டு பிடிகளைத் தவறவிட்ட நிலையில் அரைச்சதத்தைப் பூர்த்தி செய்த புக்வொஸ்கி சைனியிடம் வீழ்ந்தபோதும், லபுஷைன், ஸ்டீவ் ஸ்மித் இணைப்பில் தமது இனிங்ஸை இன்றைய நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 166 ஓட்டங்களைப் பெற்றவாறு அவுஸ்திரேலியா கட்டியெழுப்புகிறது.
தற்போது களத்தில், லபுஷைன் 67, ஸ்மித் 31 ஓட்டங்களுடனுள்ளனர்.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியா: 166/2 (துடுப்பாட்டம்: மர்னுஸ் லபுஷைன் ஆ.இ 67, வில் புக்கொவ்ஸ்கி 62, ஸ்டீவ் ஸ்மித் ஆ.இ 31 ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் சிராஜ் 1/46, நவ்தீப் சைனி 1/32)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
8 minute ago
21 minute ago
27 minute ago