Editorial / 2018 ஜூன் 10 , பி.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

மலேஷியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இடம்பெற்றுவந்த பெண்களுக்கான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டி ஆசியக் கிண்ணத் தொடரில் பங்களாதேஷ் சம்பியனாகியுள்ளது.
இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், இனிங்ஸின் இறுதிப் பந்தில் வெற்றிக்குத் தேவையான இரண்டு ஓட்டங்களைப் பெற்று 3 விக்கெட்டுகளால் இந்தியாவை வென்றே பங்களாதேஷ் சம்பியனாகியிருந்தது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணியின் தலைவி சல்மா காட்டூன் இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தார்.
அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 112 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், அணித்தலைவி ஹர்மன்பிறீட் கெளர் 56 (42) ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில், ருமானா அஹமட், காடிஜா துல் குப்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு, 113 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. துடுப்பாட்டத்தில், நிகர் சுல்தானா 27 (24), ருமானா அஹமட் 23 (22) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், பூனம் யாதவ் 4, ஹர்மன்பிறீட் கெளர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகியாக ருமானா அஹமட் தெரிவாகியதோடு, தொடரின் நாயகியாக ஹர்மன்பிறீட் கெளர் தெரிவானார்.
13 minute ago
24 minute ago
32 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
24 minute ago
32 minute ago
38 minute ago