Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
J.A. George / 2021 ஜூலை 28 , மு.ப. 08:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணிவீரர் குருனால் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதனையடுத்து, அவருடன் நெருங்கிய தொடர்பை பேணிய இந்திய அணியைச் சேர்ந்த 8 வீரர்களுக்கும் நேற்று(27) பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது அவர்கள் 8 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்திய அணி வீரர் குருனால் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, நேற்று நடக்கவிருந்த இரண்டாவது 20க்கு இருபது கிரிக்கெட் போட்டி இன்று(28) வரை பிற்போடப்பட்டது.
இதற்கமைய, அந்தப் போட்டி இன்று ஆர்.பிரேமாதாச விளையாட்டரங்கில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .