Gopikrishna Kanagalingam / 2017 மே 10 , பி.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

இன்டர் மிலான் கால்பந்தாட்டக் கழகத்தின் பயிற்றுநரான ஸ்டெபனோ பியோலி, அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர், அப்பதவிக்கு நியமிக்கப்பட்டு 6 மாதங்களில், தனது பதவியை இழந்துள்ளார்.
கடந்தாண்டு நவம்பரில், 18 மாதங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட பியோலி, அண்மைக்காலத்தில் இன்டர் மிலான் கழகம் வெளிப்படுத்திய மோசமான பெறுபேறுகளைத் தொடர்ந்து, அவரது பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை போட்டியில், பலவீனமான அணியாகக் கருதப்படும் ஜெனோவா அணியுடன் மோதிய இன்டர் மிலான், 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து, சீரி ஏ தொடரில், 7ஆவது இடத்துக்குப் பின்தள்ளப்பட்டிருந்தது.
பயிற்றுநர் தவிர, அவரது ஏனைய ஊழியர்களும் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
3 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago