Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 02 , பி.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போதைய போர்மியுலா வண் உலக சம்பியனான, மெர்சிடிஸ் அணியின் பிரித்தானியச் சாரதியான லூயிஸ் ஹமில்டன், மலேஷியன் கிரான்ட் பிறிக்ஸை, முன்னணியில் ஆரம்பித்து, தொடர்ந்து முன்னிலையில் இருந்தபோதும், 56 சுற்றுக்கள் கொண்ட பந்தயத்தில், 16 சுற்றுக்கள் இருக்கையில், அவரது இயந்திரத்தில் தீப்பிடித்தமை காரணமாக, பந்தயத்திலிருந்து விலக, ரெட் புல் அணியின் அவுஸ்திரேலியச் சாரதியான டானியல் றிச்சியார்டோ வென்றார்.
இப்பருவகாலத்தில் றிச்சியார்டோவின் முதலாவது வெற்றி இதுவென்பதோடு, சக ரெட்புல் அணியின் நெதர்லாந்துச் சாரதியான மக்ஸ் வெர்ஸ்ட்டப்பன் இரண்டாமிடம் பெற்ற நிலையில், 2013ஆம் ஆண்டு பிரேஸிலியன் கிரான்ட் பிறிக்ஸுக்குப் பின்னர் ரெட்புல் அணி, முதலாம், இரண்டாம் இடங்களைப் பெற்று, மெர்சிடிஸ் அணி, இப்பருவகால கார்த் தயாரிப்பாளர்கள் பட்டத்தைப் பெறுவதை அடுத்த பந்தயத்துக்கு தள்ளி வைத்துள்ளது.
பெராரி அணியின் பின்லாந்துச் சாரதியான கிமி றைக்கோனனுடன் மோதியமை காரணமாக 10 செக்கன்கள் தண்டத்தை, மெர்சிடிஸ் அணியின் ஜேர்மனியச் சாரதியான நிக்கோ றொஸ்பேர்க் பெற்றபோதும், பந்தயத்தில் மூன்றமிடத்தைப் பெற்று, இன்னும் ஐந்து பந்தயங்கள் இருக்கையில், தனக்கும் ஹமில்டனுக்குமிடையிலான சம்பியன்ஷிப் புள்ளி வித்தியாசத்தை 23 ஆக அதிகரித்துக் கொண்டார்.
இதேவேளை, பெராரி அணியின் ஜெர்மனியச் சாரதியான செபஸ்டியான் வெட்டல், பந்தயத்தின் முதலாவது வளைவிலேயே, வெர்ஸ்டப்பன், றொஸ்பேர்க்குடன் மோதிய நிலையில், பந்தயத்திலிருந்து விலகியிருந்தார்.
9 minute ago
21 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
21 minute ago
33 minute ago