Editorial / 2018 ஒக்டோபர் 01 , பி.ப. 09:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ரோகித் ஷர்மா இரண்டு இடங்கள் முன்னேறி இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளார்.
நடந்து முடிந்த ஆசியக் கிண்ணத்தைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட குறித்த தரப்படுத்தல்களில், ஆசியக் கிண்ணத்தில் 105.66 என்ற சராசரியில் 317 ஓட்டங்களைப் பெற்றதைத் தொடர்ந்தே நான்காமிடத்திலிருந்த ரோகித் இரண்டு இடங்கள் முன்னேறி இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளார்.
இதேவேளை, குறித்த ஆசியக் கிண்ணத்தில் 342 ஓட்டங்களைப் பெற்ற ரோகித் ஷர்மாவின் சக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஷீகர் தவான், ஒன்பதாமிடத்திலிருந்து நான்கு இடங்கள் முன்னேறி ஐந்தாமிடத்தைப் பிடித்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
இதேவேளை, பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில், ஆசியக் கிண்ணத்தில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ், ஆறாமிடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி மூன்றாமிடத்தைப் பிடித்துள்ளார். இதுதவிர, ஆசியக் கிண்ணத்தில் ஏழு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஆப்கானிஸ்தானின் சுழற்பந்துவீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான் 15 இடங்கள் முன்னேறி எட்டாமிடத்தைப் பிடித்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

இந்நிலையில், ஆசியக் கிண்ணத்தில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, 43.50 என்ற சராசரியில் 87 ஓட்டங்களைப் பெற்ற ஆப்கானிஸ்தானின் ரஷீட் கான், சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையில் ஆறு இடங்கள் முன்னேறி முதலாமிடத்தைப் பிடித்ததுடன் அவரின் சக வீரரான மொஹமட் நபி 134 ஓட்டங்களைப் பெற்றதுடன், ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஒரு இடம் முன்னேறி மூன்றாமிடத்தைப் பிடித்துள்ளார்.
முதல் ஐந்து சகலதுறை வீரர்கள் பின்வருமாறு,
3 hours ago
7 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
8 hours ago
8 hours ago