Editorial / 2018 ஏப்ரல் 12 , பி.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கின் இவ்வாண்டு தொடரில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த இரண்டு போட்டிகளை கெண்டைக் கால் பின்தசை காயம் காரணமாக, அவ்வணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சுரேஷ் ரெய்னா தவறவிடவுள்ளார்.
அந்தவகையில், தனது விளையாடும் காலத்தில் முதன்முறையாக சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் போட்டிகளைத் தவறவிடவுள்ள சுரேஷ் ரெய்னா, நாளை மறுதினம் இடம்பெறவுள்ள கிங்ஸ் லெவிண் பஞ்சாப் அணிக்கெதிரானதும் இம்மாதம் 20ஆம் திகதி இடம்பெறவுள்ள ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கெதிரானதுமான அவ்வணியின் போட்டிகளில் பங்கேற்கமாட்டார்.
கொல்கத்தா நைட்றைடர்ஸ் அணிக்கெதிராக, கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்ற போட்டியிலேயே சுரேஷ் ரெய்னா காயமடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சென்னை சுப்பர் கிங்ஸின் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் குறித்த போட்டி இடம்பெற்றிருந்த நிலையில். இப்போட்டியையொட்டி காவிரி நதிநீர் பங்கீடு காரணமாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்ற நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள மிகுதி ஆறு போட்டிகளும் புனேக்கு இந்தியன் பிறீமியர் லீக்கால் மாற்றப்பட்டுள்ளது.
31 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
4 hours ago
5 hours ago