Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 07:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில், நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டக் பிரேஸ்வெல் பங்குபற்ற மாட்டார் என அறிவிக்கப்படுகிறது. அவரது வலது தோட்பட்டையில் ஏற்பட்ட உபாதை காரணமாகவே, இரண்டாவது போட்டியில் அவர் பங்குபற்ற மாட்டார் என அறிவிக்கப்படுகிறது.
முதலாவது டெஸ்ட் போட்டியின் போதே அவருக்கு, இந்த உபாதை ஏற்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. அப்போட்டியில் அவர், 33 ஓவர்கள் பந்துவீசி, 127 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். தவிர, இரட்டைச்சதம் பெற்ற அடம் வோஜஸ், ஆரம்பத்திலேயே டக் பிரேஸ்வெல்லினால் ஆட்டமிழப்புச் செய்யப்பட்ட போதிலும், நடுவர், தவறான முறையில் முறையற்ற பந்து என அறிவித்திருந்தார்.
அவருக்குப் பதிலாக, எந்தவொரு வீரரின் பெயரும் குறிப்பிடப்படாத நிலையில், நீல் வக்னர் அல்லது மற் ஹென்றி, அவருக்குப் பதிலாக விளையாடுவர் என எதிர்பர்க்கப்படுகிறது. ஏற்கெனவே, றொஸ் டெய்லர், மிற்சல் சான்ட்னெர் இருவரும், உபாதை காரணமாக இரண்டாவது போட்டியில் பங்குபெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago