Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஜனவரி 25 , மு.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
பங்களாதேஷ், இலங்கை, சிம்பாப்வே அணிகள் பங்குகொள்ளும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் குழுநிலையின் இறுதிப் போட்டி, இன்று இடம்பெறுகிறது.
இன்றைய போட்டி வரை, இறுதிப் போட்டியில் பங்குபற்றும் அணிகளுள் ஓர் அணி மாத்திரம் தான் உறுதியாகியுள்ளமை, இத்தொடரில் எவ்வாறு அணிகள் மாறி மாறி வெற்றிபெற்றன என்பதைக் காட்டுகிறது.
இத்தொடர் ஆரம்பிக்கும் போது, இவ்வாறான நிலை காணப்பட்டால், இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை உறுதிசெய்த அணியாக, இலங்கையே இருக்குமெனக் கருதப்பட்டிருக்கும். ஆனால் மாறாக, பங்களாதேஷ் அணியே, இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றிருக்கிறது.
இலங்கையும் சிம்பாப்வேயும், தலா 4 புள்ளிகளுடன் காணப்படுகின்றன. இரு அணிகளுக்குமிடையிலான நிகர ஓட்ட சராசரி வித்தியாசமும், பெரிதளவுக்கு இல்லை. இலங்கைக்கு -0.989 என்ற அளவும், சிம்பாப்வேக்கு -1.087 என்ற அளவும் காணப்படுகிறது. எனவே, இப்போட்டியில் வெற்றிபெற்றால் தான், இறுதிப் போட்டிக்கு, இலங்கையால் தகுதிபெற முடியும்.
இப்போட்டி, மிக அதிகளவிலான ஓட்டங்களைக் குவிக்கும் போட்டியாக அமைந்தால், மிகக்குறைவான ஓட்டங்களின் வித்தியாசத்தில் தோற்றாலும், இறுதிப் போட்டியில் வெற்றிபெறும் வாய்ப்பு, இலங்கைக்கு உண்டு. ஆனால், ஓட்டங்கள் பெருமளவுக்குக் குவிக்கப்படும் போட்டியாக இது இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே, பங்களாதேஷ் அணியுடன் தோல்வியடைந்து, அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ள இலங்கை, இப்போட்டியிலும் அதே அழுத்தத்தை எதிர்கொள்கிறது. எனவே, அதிக வெற்றி வாய்ப்புள்ள அணியாக, பங்களாதேஷ் அணியே கருதப்படுகின்றமை, பங்களாதேஷின் அண்மைக்கால வளர்ச்சியையும், இலங்கையின் அண்மைக்கால வீழ்ச்சியையும் எடுத்துக் காட்டுகின்றன.
இன்றைய போட்டி, மிர்பூரிலுள்ள ஷேரே பங்களா தேசிய விளையாட்டரங்கில், இலங்கை நேரப்படி காலை 11:30க்கு ஆரம்பிக்கவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago