Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 16 , மு.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக்கின் ஹம்பாந்தோட்டையில் இன்றிரவு ஏழு மணிக்கு நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் கோல் கிளாடியேட்டர்ஸை ஜஃப்னா ஸ்டாலியன்ஸ் எதிர்கொள்ளவுள்ளது.
குழுநிலைப் போட்டிகளில் இரண்டு போட்டிகளிலேயே காலி வெற்றி பெற்றிருந்தபோதும், தொடரின் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற தனுஷ்க குணதிலக அவ்வணியிலேயே காணப்படுகின்றார். ஆகையால் அவரின் விக்கெட்டை விரைவில் கைப்பற்றுவதில் யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான வாய்ப்புகள் காணப்படுகின்றன.
இதேவேளை, குணதிலக தவிர அணித்தலைவர் பானுக ராஜபக்ஷ, ஹஸரத்துல்லா ஸஸாய், அஸாம் கான் மற்றும் அரையிறுதியில் கலக்கிய தனஞ்சய லக்ஷன் ஆகியோரும் அதிரடியாக துடுப்பெடுத்தாடக்கூடியவர்கள் என்ற நிலையில் இவர்களின் விக்கெட்டுகளும் அவசியமாகின்றது.
இதுதவிர, இறுதிப் போட்டி போன்ற அழுத்தமுள்ள போட்டியில் மொஹமட் ஆமிர் சிறப்பாகச் செயற்படுவார் என்ற நிலையில் அவரைக் கையாள வேண்டியுள்ளது.
யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் சார்ள்ஸ், அவிஷ்கவிடமிருந்து அடித்தளமொன்று கிடைத்து, அணித்தலைவர் திஸர பெரேராவும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடினால் கிண்ணம் அவ்வணி வசமாவதற்கு பெரும்பாலான வாய்ப்புகள் காணப்படுகின்றன.
பந்துவீச்சைப் பொறுத்தவரையில் ஹஸரங்கவுடன், லக்மால், சத்துரங்க டி சில்வா, தனஞ்சய டி சில்வா, ஒலிவியர், ஷின்வாரி எனப் பலமானதாகவே யாழ்ப்பாணம் காணப்படுகின்றது.
இரண்டு அணிகளினதும் சிறந்த அணிகளே அரையிறுதிப் போட்டியில் விளையாடிய நிலையில் அதே அணிகளே இறுதிப் போட்டியிலும் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
52 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
2 hours ago
3 hours ago