2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

இறுதி நான்கிடங்களை நெருங்கும் ஷரபோவா

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிங்கப்பூரில் இடம்பெற்றுவரும் உலக டென்னிஸ் சங்க இறுதிப்போட்டிகளின் இறுதி நான்கு இடங்களை தரவரிசையில் நான்காம் இடம் வகிக்கும் ரஷ்யாவின் மரியா ஷரபோவா நெருங்கியுள்ளார்.

உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையும் இந்தத் தொடரை வெல்பவர்களில் முதலிடத்திலும் காணப்பட்ட ரோமானியாவின் சிமோனா ஹலெப்பை 6-4,6-4 என்ற செட் கணக்கில் தோற்கடித்தமையை அடுத்து சிவப்புக் குழுவின் முதலிடத்துக்கு ஷரபோவா முன்னேறியுள்ளார்.

இதேவேளை முன்னர் இடம்பெற்ற போட்டியொன்றில் அமெரிக்க பகிரங்க சம்பியனும் தரவரிசையில் எட்டாம் இடத்திலிலுள்ளவருமான இத்தாலியின் பிளாவியா பெனிற்றா, 7-6 (7-5) 6-4 என்ற செட் கணக்கில் தரவரிசையில் ஆறாம் இடத்திலுள்ள போலந்து வீராங்கனையான அக்னியன்ஸ்கா ரட்வன்ஸ்காவை  தோற்கடித்து, இறுதி நான்கு இடங்களுக்குள் தகுதி பெறுவதற்கான தனது வாய்ப்பைப் தக்க வைத்துக் கொண்டார்.

சிவப்புக் குழுவின் இறுதிச் சுற்றுப் போட்டிகளாக, ஷரபோவா, பெனிற்றாவைச் சந்திக்கவுள்ளதுடன், ஹலெப், ரட்வன்ஸ்காவை எதிர்கொள்ளவுள்ளார். நான்கு வீராங்கனைகளும் அரையிறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பைப் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

33 வயதான இத்தாலியின் பிளாவியா பெனிற்றா நாளைய போட்டியுடன் அநேகமாக ஓய்வுபெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .