2026 மே 20, புதன்கிழமை

dd

இலங்கையில் சாதகமான சந்திப்பில் சர்வதேச கிரிக்கெட் சபை

Shanmugan Murugavel   / 2026 மே 19 , பி.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய செயற்குழுவுடன் நட்புறவான கட்டமைக்கப்பட்ட கலந்துரையாடல்களில் சர்வதேச கிரிக்கெட் சபையின் பிரதித் தலைவர் இம்ரான் காவாஜா ஈடுபட்டதாக செயற்குழுவின் உறுப்பினரொருவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கமானது புதிய செயற்குழுவை நியமித்ததுக்கு என்ன பதிலளிப்பு என சர்வதேச கிரிக்கெட் சபை தீர்மானிக்கையிலேயே இலங்கைக்குக்கு காவாஜா விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் சபையை வழமையான முழு உறுப்பினராக சர்வதேச கிரிக்கெட் சபை கருதுமென எதிர்பார்ப்பதாக செயற்குழுவின் உறுப்பினர் சிதத் வெத்தமுனி கூறியுள்ளார்.

அரசாங்கத் தலையீடு காரணமாக 2023ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் சபை இடைநிறுத்தப்பட்டிருந்ததுடன், 2015-இல் முன்னைய இடைக்கால செயற்குழு அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டதையடுத்து நிதிக் கொடுப்பனவுகள் முடக்கப்பட்டிருந்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X