Freelancer / 2026 மே 20 , மு.ப. 07:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் தெரிவிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முதல்வர் விஜய் மற்றும் 9 அமைச்சர்களுக்கான இலாகாக்கள். கடந்த 16 ஆம் திகதி ஒதுக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து திங்கள்கிழமை 9 அமைச்சர்களும் தலைமைச்செயலகத்தில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளுக்கு சென்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற விஜய், தமிழகத்தில் அடுத்த 3 மாதங்களில் லஞ்சம் முழுமையாக ஒழிக்கப்படும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அதனை தொடர்ந்து முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் லஞ்ச ஒழிப்பு மற்றும் நிர்வாகத் தூய்மைக்கான அதிரடி நடவடிக்கைகள் அடிமட்ட அளவில் வேகம் எடுக்கத் தொடங்கி உள்ளன.
இந்தநிலையில், தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், :எந்த அரசு துறையாக இருந்தாலும் உங்களிடம் 1000 ரூபா லஞ்சம் கேட்டால்கூட ஆதாரத்துடன் புகார் தெரிவிக்கலாம் புகார் அளிப்பவர்களுக்கு 1 லட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் என
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த அதிரடி அறிவிப்பு சாமனிய மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த அதிரடி அறிவிப்பால் லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
முதல்வர் ஜோசப் விஜய் தானே ஒரு அரசு ஊழியரைப் போல உரிய நேரத்திற்கு அலுவலகம் வந்து பணியாற்றுகின்றமை அதிகாரிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் பணத்தை நான் ஒரு பைசா கூட தொடமாட்டேன் என்று உறுதியளித்துள்ள அவர், ஊழலற்ற வெளிப்படையான ஆட்சியை வழங்க இலக்கு வைத்துள்ளார். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .