Freelancer / 2026 மே 20 , மு.ப. 08:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
“எனது பதவிக் காலத்தில் இந்த உலகம் பேரழிவை நோக்கிச் செல்வதை என்னால் வேடிக்கை பார்க்க முடியாது. அது ஒருபோதும் நடக்காது” என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்தார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப். ஈரான் அரசுக்கு எதிரான தற்போதைய இராணுவ நடவடிக்கைகள் அமெரிக்க மக்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளதாக தெரிவித்தார்.
ஈரானின் அதிதீவிரவாதத் தலைமை ஒருபோதும் அணு ஆயுதத்தைப் பெற அமெரிக்கா அனுமதிக்காது என்று குறிப்பிட்ட ட்ரம்ப், "இந்த நடவடிக்கை மக்களுக்குப் பிடித்திருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. எனது பதவிக் காலத்தில் இந்த உலகம் பேரழிவை நோக்கிச் செல்வதை என்னால் வேடிக்கை பார்க்க முடியாது. அது ஒருபோதும் நடக்காது" என்று கூறினார். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .