Shanmugan Murugavel / 2021 ஏப்ரல் 22 , பி.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்டில் பங்களாதேஷ் ஆதிக்கம் செலுத்துகின்றது.
இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரில், பல்லேகலவில் நேற்று ஆரம்பமான குறித்த டெஸ்டின் இன்றைய இரண்டாம் நாளை, தமது முதலாவது இனிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 302 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த பங்களாதேஷ், நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ, அணித்தலைவர் மொமினுல் ஹக் மூலம் தமது இனிங்ஸை நகர்த்தியது.
இந்நிலையில், 163 ஓட்டங்களுடனும் நஜ்முல் ஹொஸைன் ஷன்டோவும், 127 ஓட்டங்களுடன் மொமினுல் ஹக்கும் குறிப்பிட்ட இடைவெளிகளில் லஹிரு குமார, லிட்டன் தாஸிடம் வீழ்ந்த நிலையில் தொடர்ந்து வந்த முஷ்பிக்கூர் ரஹீம், லிட்டன் தாஸின் இணைப்பாட்டத்தில் தமது இனிங்ஸை பங்களாதேஷ் நகர்த்துகின்றது.
போதிய வெளிச்சமின்மை காரணமாக இன்றைய நாள் ஆட்டமானது முன்னரே முடிவுக்கு வந்த நிலையில், பங்களாதேஷ் தமது முதலாவது இனிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்து 474 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. களத்தில், தற்போது முஷ்பிகூர் ரஹீம் 43, லிட்டன் தாஸ் 25 ஓட்டங்களுடனுள்ளனர்.
14 Apr 2026
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Apr 2026
14 Apr 2026