Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2021 நவம்பர் 22 , பி.ப. 05:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் தடுமாறி வருகிறது.
இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரில், காலியில் நேற்று ஆரம்பித்த இந்த டெஸ்டின் இன்றைய இரண்டாம் நாளை 3 விக்கெட்டுகளை 267 ஓட்டங்களைப் பெற்றவாறு தமது முதலாவது இனிங்ஸில் ஆரம்பித்த இலங்கை குறிப்பிட்ட இடைவெளிகளில் ஷனொன் கப்ரியல், றொஸ்டன் சேஸ், ஜோமெல் வொரிக்கானிடம் விக்கெட்டுகளை இழந்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 386 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில், அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 147, தனஞ்சய டி சில்வா 61, பதும் நிஸங்க 56, தினேஷ் சந்திமால் 45 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், சேஸ் 5, வொரிக்கான் 3, கப்ரியல் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் மேற்கிந்தியத் தீவுகள், லசித் எம்புல்தெனிய, பிரவீன் ஜெயவிக்கிரம, ரமேஷ் மென்டிஸிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து இன்றைய இரண்டாம் நாளில் 6 விக்கெட்டுகளை இழந்து 113 ஓட்டங்களைப் பெற்றுத் தடுமாறி வருகிறது.
தற்போது களத்தில், கைல் மேயர்ஸ் 22, ஜேஸன் ஹோல்டர் ஓர் ஓட்டத்துடன் காணப்படுகின்றனர். முன்னதாக, அணித்தலைவர் கிறேய்க் பிறத்வெய்ட் 41, ஜெர்மைன் பிளக்வூட் 20 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்திருந்தனர். பந்துவீச்சில், மென்டிஸ் 3, ஜெயவிக்கிரம 2, எம்புல்தெனிய 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
இந்நிலையில், தலைக்கவசத்தில் பந்து தாக்கிய ஜெரெமி சொலஸனோவை ஷே ஹோப் பிரதியிட்டிருந்தார்.
26 minute ago
51 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
51 minute ago
2 hours ago
3 hours ago