Shanmugan Murugavel / 2026 ஜனவரி 08 , மு.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கெதிரான முதலாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியை பாகிஸ்தான் வென்றது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், தம்ப்புள்ளையில் புதன்கிழமை (07) நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இலங்கை, சல்மான் மிர்ஸா (3), மொஹமட் வாஸிம் (2), ஷடாப் கான் (2), அப்ரார் அஹ்மட்டிடம் (3) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 128 ஓட்டங்களையே பெற்றது. ஜனித் லியனகே 40 (31) ஓட்டங்களைப் பெற்றார்.
பதிலுக்கு 129 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், சஹிப்ஸடா பர்ஹானின் 51 (36) ஓட்டங்களுடன் 16.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. தனஞ்சய டி சில்வா 2-0-4-1, வனிது ஹசரங்க 4-0-17-1, மகேஷ் தீக்ஷன 4-0-31-1, துஷ்மந்த சமீர 4-0-34-1 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
இப்போட்டியின் நாயகனாக ஷடாப் கான் தெரிவானார்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago