Shanmugan Murugavel / 2025 நவம்பர் 17 , மு.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் இலங்கையை பாகிஸ்தான் வெள்ளையடித்தது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளையும் ஏற்கெனவே வென்ற பாகிஸ்தான், ராவல்பின்டியில் ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற மூன்றாவது போட்டியையும் வென்றமையைத் தொடர்ந்தே 3-0 என்ற ரீதியில் இலங்கையை வெள்ளையடித்தது.
இப்போட்டியில் இலங்கை சார்பாக பவன் ரத்னாயக்க அறிமுகத்தை மேற்கொண்டிருந்தார்.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்
இலங்கை: 211/10 (45.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: சதீர சமரவிக்கிரம 48 (65), குசல் மென்டிஸ் 34 (54), பவன் ரத்னாயக்க 32 (37), கமில் மிஷார 29 (30), பதும் நிஸங்க 24 (27) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் வாஸிம் 3/47, ஹரிஸ் றாஃப் 2/38, பைஸல் அக்ரம் 2/42, ஷகீன் ஷா அஃப்ரிடி 1/36, பஹீம் அஷ்ரஃப் 1/43)
பாகிஸ்தான்: 215/4 (44.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: மொஹமட் றிஸ்வான் ஆ.இ 61 (92), பக்கர் ஸமன் 55 (45), ஹுஸைன் தலாட் ஆ.இ 42 (57), பாபர் அஸாம் 34 (52) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜெஃப்ரி வன்டர்சே 3/42, மகேஷ் தீக்ஷன 1/37)
போட்டியின் நாயகன்: மொஹமட் வஸிம்
தொடரின் நாயகன்: ஹரிஸ் றாஃப்
5 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago