Shanmugan Murugavel / 2021 ஏப்ரல் 20 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது, பல்கேகலவில் நாளை காலை 10 மணிக்கு ஆரம்பிக்கும் முதலாவது டெஸ்டுடன் ஆரம்பிக்கின்றது.
இறுதியாக மேற்கிந்தியத் தீவுகளில் தாம் விளையாடிய அவ்வணியுடனான டெஸ்ட் தொடரை இலங்கை சமப்படுத்தியதோடு, சொந்த மண்ணில் மேற்கிந்தியத் தீவுகளிடம் டெஸ்ட் தொடரை பங்களாதேஷ் இழந்த நிலையிலுமே இத்தொடர் நடைபெறுகின்றது.
அந்தவகையில், இலங்கைக்கே தொடரை வெல்வதற்குரிய அதிக வாய்ப்புகள் காணப்படினும், அண்மைய காலங்களில் இலங்கையின் தொடர்ச்சியற்ற திறமை வெளிப்பாடுகளால் எதையும் உறுதியாகக் கூற முடியாத நிலைமை காணப்படுகின்றது.
அணித்தலைவர் திமுத் கருணாரத்ன, தினேஷ் சந்திமால், நிரோஷன் டிக்வெல்ல ஆகியோர் தொடர்ச்சியான பெறுபேற்றை வெளிப்படுத்த வேண்டியுள்ளதோடு, லசித் எம்புல்தெனிய இல்லாத நிலையில் பல்லேகல ஆடுகளமானது வேகப்பந்துவீச்சுக்கு சாதகமானது என்றாலும் விக்கெட்டுகளைக் கைப்பற்ற வேண்டிய தேவை வனிடு ஹஸரங்கவுக்கு காணப்படுகின்றது.
மறுபக்கமாக, ஷகிப் அல் ஹஸன் இல்லாத நிலையில், அணித்தலைவர் மொமினுல் ஹக், முஷ்பிக்கூர் ரஹீம், மொஹமட் மிதுன், லிட்டன் தாஸ் ஆகியோர் தொடர்ச்சியான பெறுபேறுகளை வெளிப்படுத்த வேண்டிய தேவையுள்ளதோடு, மெஹிடி ஹஸன் மிராஸ் சகலதுறையிலும் பிரகாசித்தாலே இலங்கைக்கு பங்களாதேஷ் சவாலையளிக்க முடியும்.
4 hours ago
17 Apr 2026
17 Apr 2026
17 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
17 Apr 2026
17 Apr 2026
17 Apr 2026