Editorial / 2017 நவம்பர் 12 , பி.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}


இலங்கை, இந்திய கிரிக்கெட் சபைத் தலைவர் பதினொருவர் அணிகளுக்கிடையிலான இரண்டு நாள் பயிற்சிப் போட்டியில், இலங்கையணியின் துடுப்பாட்ட வீரர்கள் பிரகாசித்திருந்தனர்.
கொல்கத்தாவில், நேற்று ஆரம்பித்து இன்று முடிவடைந்த குறித்த போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கையணி, தமது முதலாவது இனிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 411 ஓட்டங்களைப் பெற்றபோது தமது ஆட்டத்தை இடைநிறுத்தியது. துடுப்பாட்டத்தில், சதீர சமரவிக்கிரம 74, நிரோஷன் டிக்வெல்ல ஆட்டமிழக்காமல் 73, அஞ்சலோ மத்தியூஸ் 54, திமுத் கருணாரட்ன 50, டில்ருவான் பெரேரா 48, றொஷேன் சில்வா 36 (53) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், சந்தீப் வொரியர், ஆகாஷ் பண்டாரி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் இன்று துடுப்பெடுத்தாடிய இந்திய கிரிக்கெட் சபைத் தலைவர் பதினொருவர் அணி, 5 விக்கெட்டுகளை இழந்து 287 ஓட்டங்களைப் பெற்றபோது போட்டி முடிவுக்கு வந்தது. துடுப்பாட்டத்தில், அணித்தலைவர் சஞ்சு சாம்ஸன் 128, றொஹான் பிறேம் 39, ஜிவ்னோத் சிங் 35, பவனகா சந்தீப் ஆட்டமிழக்காமல் 33 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், லஹிரு திரிமான்ன 2, டில்ருவான் பெரேரா, சதீர சமரவிக்கிரம, தனஞ்சய டி சில்வா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
33 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
4 hours ago
5 hours ago