2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

இலங்கை வெற்றி

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 10 , மு.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டு இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளைக் கொண்ட தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று, இருபதுக்கு-20 சர்வதேச தரப்படுத்தலின் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டது.

பல்லேகெல்ல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இலங்கை அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 215 ஓட்டங்களைக் குவித்தது.

திலகரட்ண டில்ஷான் 56 (37), டினேஷ் சந்திமால் ஆட்டமிழக்காமல் 40 (19), குசால் பெரேரா 40 (30), அஞ்சலோ மத்தியூஸ் ஆட்டமிழக்காமல் 37 (13), ஷெஹான் ஜயசூரிய 36 (22) ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில், கெரான் பொலார்ட் 2, சுனில் நரைன் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

216 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 185 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 30 ஓட்டங்களால் தோல்வியடைந்தார்.

ஒரு கட்டத்தில், 12.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 137 ஓட்டங்களுடன் பலமாகக் காணப்பட்ட அவ்வணி, அதன் பின்னர் விக்கெட்டுகளை இழந்திருந்தது.

துடுப்பாட்டத்தில், அன்ட்ரே பிளற்சர் 57 (40), கெரான் பொலார்ட் 26 (18), டுவைன் பிராவோ 24 (12), சுனில் நரைன் 23 (18) ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில், சச்சித்திர சேனநாயக்க 46 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், லசித் மலிங்க 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் மிலிந்த சிரிவர்தன 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் நாயகனாக, சச்சித்திர சேனநாயக்க தெரிவானார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .