Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 18 , பி.ப. 02:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், டெல்லியில் தற்போது முடிவுக்கு வந்த ஐக்கிய அரபு அமீரகத்துக்கெதிரான குழு டி போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்காவின் அணித்தலைவர் ஏய்டன் மார்க்ரம் தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடுமென அறிவித்தார்.
தென்னாபிரிக்க அணியில் டேவிட் மில்லர், கேஷவ் மஹராஜ், மார்கோ ஜன்சன், லுங்கி என்கிடிக்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையில் இவர்களை ஜேஸன் ஸ்மித், ஜோர்ஜ் லின்டி, அன்றிச் நொர்கியா, கவெனா மபஹா ஆகியோர் பிரதியிட்டனர்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட ஐ.அ. அமீரகம், ஜோர்ஜ் லின்டி, கொர்பின் பொஷ் (3), அன்றிச் நொர்கியாவிடம் (2) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து ககிஸோ றபாடா, கவெனா மபஹாவினதும் கட்டுக்கோப்பான பந்துவீச்சில் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 122 ஓட்டங்களைப் பெற்றது. அலிஷான் ஷரஃபு 45 (38), அணித்தலைவர் முஹமட் வஸீம் 22 (12) ஓட்டங்களைப் பெற்றனர்.
பதிலுக்கு 123 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா, டெவால்ட் பிறெவிஸின் 36 (25), றயான் றிக்கெல்டனின் 30 (16), மார்க்ரமின் 28 (11) ஓட்டங்களோடு 13.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக பொஷ் தெரிவானார்.
31 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
2 hours ago
3 hours ago