Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 13 , பி.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், சென்னையில் தற்போது முடிவுக்கு வந்த நெதர்லாந்துக்கெதிரான குழு ஏ போட்டியில் ஐக்கிய அமெரிக்கா வென்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட ஐக்கிய அமெரிக்கா, சைடெஜா முக்கமல்லாவின் 79 (51), ஷுபம் ரஞ்சனேயின் ஆட்டமிழக்காத 48 (24), அணித்தலைவர் மொனாக் பட்டேலின் 36 (22), ஷயான் ஜஹங்கிரின் 20 (14) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 196 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் பஸ் டீ லீட் 4-0-37-3, லோகன் வான் பீக் 4-0-28-1, கைல் கிளெய்ன் 4-0-35-1 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
பதிலுக்கு 197 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து, நொஸ்துஷ் கெஞ்சிகே, ஹர்மீட் சிங் (4), ஷட்லி வன் ஸ்கல்குவாக் (3), மொஹமட் மொஹ்சின்னிடம் (2) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 15.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 103 ஓட்டங்களையே பெற்று 93 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக ஹர்மீட் சிங் தெரிவானார்.
24 minute ago
30 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
30 minute ago
34 minute ago