2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

இ – 20 உலகக் கிண்ணம்: இந்தியாவை வீழ்த்திய தென்னாபிரிக்கா

Shanmugan Murugavel   / 2026 பெப்ரவரி 22 , பி.ப. 10:36 - 1     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், அஹமதாபாத்தில் முடிவுக்கு வந்த நடப்புச் சம்பியன்களான இந்தியாவுக்கெதிரான குழு ஒன்று சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது.  

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா, டேவிட் மில்லரின் 63 (35), டெவால்ட் பிறெவிஸின் 45 (29), ட்ரிஸ்டன் ஸ்டப்ஸின் ஆட்டமிழக்காத 44 (24) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் ஜஸ்பிரிட் பும்ரா 4-0-15-3, அர்ஷ்டீப் சிங் 4-0-28-2 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.

பதிலுக்கு 188 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்தியா, அணித்தலைவர் ஏய்டன் மார்க்ரம் (1), மார்கோ ஜன்சன் (4), கொர்பின் பொஷ் (2), கேஷவ் மஹராஜ்ஜிடம் (3) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 18.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 111 ஓட்டங்களையே பெற்று 76 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில் ஷிவம் டுபே 42 (37) ஓட்டங்களைப் பெற்றார்.

இப்போட்டியின் நாயகனாக மில்லர் தெரிவானார்.


  Comments - 1

  • sri Sunday, 22 February 2026 10:47 PM

    how David miller got into Indian team. you share wrong news

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .