2026 பெப்ரவரி 16, திங்கட்கிழமை

இ – 20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை வீழ்த்தி சுப்பர் – 8 சுற்றில் இந்தியா

Shanmugan Murugavel   / 2026 பெப்ரவரி 15 , பி.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் சுப்பர் – 8 சுற்றுக்கு நடப்புச் சம்பியன்களான இந்தியா தகுதி பெற்றுள்ளது.

குழு ஏயில் ஐக்கிய அமெரிக்கா, நமீபியாவை ஏற்கெனவே வென்றிருந்த இந்தியா, கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் முடிவுக்கு வந்த பாகிஸ்தானுடனான போட்டியில் வென்றதன் மூலமே இன்னுமொரு போட்டி மீதமிருக்கையிலேயே சுப்பர் – 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்

இந்தியா: 175/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: இஷன் கிஷன் 77 (40), சூரியகுமார் யாதவ் 32 (29), ஷிவம் டுபே 27 (17), திலக் வர்மா 25 (24), ரிங்கு சிங் ஆ.இ 11 (04) ஓட்டங்கள். பந்துவீச்சு: சைம் அயூப் 3/25 [4], சல்மான் அக்ஹா 1/10 [2], உஸ்மான் தாரிக் 1/24 [4], மொஹமட் நவாஸ் 0/28 [4])

பாகிஸ்தான்: 114/10 (18 ஓவ. ) (துடுப்பாட்டம்: உஸ்மான் கான் 44 (34), ஷகீன் ஷா அஃப்ரிடி ஆ.இ 23 (19) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஹர்திக் பாண்டியா 2/16 [3], வருண் சக்கரவர்த்தி 2/17 [3], அக்ஸர் பட்டேல் 2/29 [4], ஜஸ்பிரிட் பும்ரா 2/17 [2], குல்தீப் யாதவ் 1/14 [3], திலக் வர்மா 1/11 [2])

போட்டியின் நாயகன்: இஷன் கிஷன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X