2026 பெப்ரவரி 15, ஞாயிற்றுக்கிழமை

இ – 20 உலகக் கிண்ணம்: முதலாவது அணியாக சுப்பர் – 8 சுற்றில் மே. தீவுகள்

Shanmugan Murugavel   / 2026 பெப்ரவரி 15 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் சுப்பர் – 8 சுற்றுக்கு முதலாவது அணியாக மேற்கிந்தியத் தீவுகள் தகுதி பெற்றது.

குழு சியில் ஸ்கொட்லாந்து, இங்கிலாந்தை ஏற்கெனவே வென்றிருந்த மேற்கிந்கியத் தீவுகள், மும்பையில் தற்போது முடிவுக்கு வந்த நேபாளத்துக்கெதிரான போட்டியை வென்றமையையடுத்தே, இன்னுமொரு போட்டி மீதமிருக்கையிலேயே சுப்பர் – 8 சுற்றுக்குத் தகுதி பெறுவதை உறுதி செய்தது.

மறுபக்கமாக இங்கிலாந்து, இத்தாலியிடம் ஏற்கெனவே தோற்றிருந்த நேபாளம் இப்போட்டியிலும் தோற்றதன் மூலம் தொடரிலிருந்து வெளியேறியது.

இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்தியத் தீவுகளின் அணித்தலைவர் ஷாய் ஹோப், நேபாளத்தை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய நேபாளம், அகீல் ஹொஸைன், மத்தியூ போர்டே, ஜேசன் ஹோல்டர் (4), ஷாமர் ஜோசப், றொஸ்டன் சேஸிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தபோதும் டிபேந்திர சிங் ஐரீயின் 58 (47), சோம்பால் கமியின் ஆட்டமிழக்காத 26 (15) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு 133 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள், அணித்தலைவர் ஹோப்பின் ஆட்டமிழக்காத 61 (44), ஷிம்ரோன் ஹெட்மயரின் ஆட்டமிழக்காத 46 (32) ஓட்டங்களோடு 15.2 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில் நந்தன் யாதவ் 3-0-24-1, டிபேந்திர சிங் ஐரீ 3.2-0-19-0, கரன் கே.சி 2-0-12-0 என்ற பெறுதியைக் கொண்டிருந்தனர்.

இப்போட்டியின் நாயகனாக ஹோல்டர் தெரிவானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X