2026 பெப்ரவரி 18, புதன்கிழமை

இ – 20 உலகக் கிண்ணம்: 12 ஆண்டுகளின் பின்னர் வென்ற நேபாளம்

Shanmugan Murugavel   / 2026 பெப்ரவரி 17 , பி.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் நேபாளம் வென்றுள்ளது.

மும்பையில் முடிவுக்கு வந்த ஸ்கொட்லாந்துக்கெதிரான குழு சி போட்டியிலேயே 12 ஆண்டுகள் காத்திருப்பை பூர்த்தி செய்து நேபாளம் வென்றது.2014ஆம் ஆண்டு இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத்தில் ஹொங் கொங், ஆப்கானிஸ்தானை வென்ற பின்னர் தற்போதே நேபாளம் வென்றுள்ளது. 2024ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் தென்னாபிரிக்கா, பங்களாதேஷிடம் தோல்வியடைந்திருந்தது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: நேபாளம்

ஸ்கொட்லாந்து: 170/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: மைக்கல் ஜோன்ஸ் 71 (45) ஓட்டங்கள். பந்துவீச்சு: சோம்பால் கமி 3/25 [4], நந்தன் யாதவ் 2/34 [4], றோஹித் பெளடெல் 1/12 [2])

நேபாளம்: 171/3 (19.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: டிபேந்திர சிங் ஐரீ ஆ.இ 50 (23), குஷால் புர்டேல் 43 (35), ஆசிஃப் ஷெய்க் 33 (27), குல்சன் ஜா ஆ.இ 24 (17) ஓட்டங்கள். பந்துவீச்சு: மைக்கல் லீஸ்க் 3/30 [4], ஒலிவியர் டேவிட்சன் 0/31 [4], பிரண்டன் மக்முல்லன் 0/5 [1], பிராட் கரி 0/33 [4])

போட்டியின் நாயகன்: டிபேந்திர சிங் ஐரீ


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X