Shanmugan Murugavel / 2024 மே 09 , பி.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடருக்கான இலங்கைக் குழாமில் டுனித் வெல்லலாகே இடம்பெற்றுள்ளார். வெல்லலாகே இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் இதுவரையில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கமிந்து மென்டிஸ், நுவான் துஷார, தனஞ்சய டி சில்வா ஆகியோரும் குழாமில் இடம்பெற்றுள்ள நிலையில் துடுப்பாட்டவீரர்களான அவிஷ்க பெர்ணாண்டோ, குசல் பெரேரா மற்றும் வேகப்பந்துவீச்சாளரான பினுர பெர்ணாண்டோ குழாமில் இடம்பெறவில்லை.
குழாம்: வனிடு ஹசரங்க (அணித்தலைவர்), சரித் அசலங்க (உப அணித்தலைவர்), குசல் மென்டிஸ், பதும் நிஸங்க, கமிந்து மென்டிஸ், சதீர சமரவிக்கிரம, அஞ்சலோ மத்தியூஸ், தசுன் ஷானக, தனஞ்சய டி சில்வா, மகேஷ் தீக்ஷன, டுனித் வெல்லலாகே, துஷ்மந்த சமீர, மதீஷ பத்திரண, நுவான் துஷார, டில்ஷான் மதுஷங்க.
மேலதிக வீரர்கள்: அசித பெர்ணாண்டோ, விஜயகாந்த் வியாஸ்காந்த், பானுக ராஜபக்ஷ, ஜனித் லியனகே.
13 minute ago
24 minute ago
32 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
24 minute ago
32 minute ago
38 minute ago