Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 04 , பி.ப. 06:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் அணிகளை 40 ஆக உயர்த்துவதாக முன்னர் தெரிவித்திருந்த பீபா தலைவர் ஜியானி இன்பான்டினோ, உலகக் கிண்ண இறுதிப் போட்டிகளை, 48 அணிகளுக்கானதாக விரிவாக்கும் யோசனையை தற்போது முன்வைத்துள்ளார்.
இன்பான்டினோவின் கருத்துப்படி, ஆரம்ப கட்ட விலகல் முறையிலான சுற்றைத் தொடர்ந்து 16 அணிகள் வெளியேற்றப்படுமெனவும், அதன் பிறகு, மிகுதித் தொடரானது தற்போது நடைபெறுவது போல, 32 அணிகள், குழு நிலைப் போட்டிகளில் போட்டியிடுவதோடு, அதன்பின்னர் விலகல் முறையில் சுற்றுக்கள் இடம்பெறவுள்ளன.
உலகக் கிண்ண இறுதிப் போட்டிகளில், பங்கேற்கும் அணிகளை விரிவாக்குவது தொடர்பான முடிவு, எதிர்வரும் ஜனவரி மாதத்தில் எடுக்கப்படும் என இன்பான்டினோ கூறியுள்ளார். சிறந்த தீர்வைக் கண்டுபிடிப்பதற்கான யோசனைகள் இருப்பதாகவும், அவற்றினை தாங்கள், இம்மாதம் விவாதிப்போம் எனவும் 2017ஆம் ஆண்டில் அனைத்தையும் முடிவு செய்வோம் என இன்பான்டினோ தெரிவித்துள்ளார்.
உலக கால்பந்தாட்டத்தை ஆளும் அமைப்பான பீபாவின் தலைவராக, கடந்த பெப்ரவரி மாதம் பதவியேற்ற இன்பான்டினோவின் தேர்தல் உறுதிப்பாட்டில் ஒன்று, உலகக் கிண்ணத்தை, 40 அணிகளுக்கு விரிவாக்குவது ஆகும்.
எவ்வாறெனினும் தற்போது இன்பான்டினோவின் திட்டப்படி, போட்டி நடைபெறும் நாட்டில் இடம்பெறும், ஆரம்பகட்ட விலகல் முறையிலான சுற்றில் 32 அணிகள் பங்கெடுப்பதுடன், அவற்றில் வெற்றி பெறும் அணிகள், தரவரிசையில் முதல் 16 இடங்களில் இருக்கும் அணிகளுடன் குழு நிலைப் போட்டிகளுக்கு இணைந்து கொள்ளும்.
32 minute ago
9 hours ago
17 Apr 2026
17 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
9 hours ago
17 Apr 2026
17 Apr 2026