Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 11 , பி.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஷ்யாவில் 2018ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ணத்துக்கான தகுதிகாண் போட்டிகளில், நேற்று முன்தினம் திங்கட்கிழமை (10) இடம்பெற்ற போட்டிகளில், இரண்டு பலம் வாய்ந்த அணிகள் மோதிய போட்டியான, பிரான்ஸ், நெதர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் பிரான்ஸ் வெற்றி பெற்றது.
நெதர்லாந்தை, 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வென்றது. பிரான்ஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை, உலகின் விலையுயர்ந்த வீரரான போல் பொக்பா, போட்டியின் 30ஆவது நிமிடத்தில், 30 யார் தூரத்திலிருந்து அபாரமாகப் பெற்றிருந்தார். இப்போட்டியில், காயம் காரணமாக, வெஸ்லி ஸ்னைடர், ஆர்ஜன் ரொபின் ஆகியோர் பங்கேற்காத நிலையில், இளம் நெதர்லாந்து அணியே இப்போட்டியில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இடம்பெற்ற ஏனைய போட்டிகளில், 3-0 என்ற கோல் கணக்கில் பல்கேரியாவை சுவீடன் வென்றதுடன், அன்டோராவை, 2-1 என்ற கோல் கணக்கில் சுவிற்ஸர்லாந்தை தோற்கடித்ததுடன், பரோயி தீவுகளை, 6-0 என்ற கோல் கணக்கில் போர்த்துக்கல் தோற்கடித்ததுடன், ஜிப்ரால்ட்டரை, 6-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் தோற்கடித்திருந்தது.
41 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
52 minute ago
1 hours ago