Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிற்சல் ஸ்டார்க், இந்தியாவில் இடம்பெறவுள்ள உலக இருபதுக்கு-20 தொடரில் பங்குபற்றுவதற்கு வாய்ப்புகள், மிக அரிதாக இருப்பதாக அறிவிக்கப்படுகிறது.
ஸ்டார்க்குக்குக் காணப்படும் கணுக்கால் உபாதைக்காகச் சத்திரசிகிச்சை மேற்கொள்ளவுள்ளதன் காரணமாக, இத்தொடரில் பங்குபற்றுவது சந்தேகத்துக்குரியதாக மாறியுள்ளது.
ஏற்கெனவே, நியூசிலாந்துக்கெதிரான தொடரில், காற்பாதத்தில் காயமடைந்த அவர், அதிலிருந்து மீண்டுவரும் நிலையிலேயே, அவருக்க நீண்டகாலமாகக் காணப்படும் கணுக்கால் உபாதைக்கான சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது.
அடுத்தாண்டு மார்ச் மாதத்தில், உலக இருபதுக்கு-20 தொடர் ஆரம்பிக்கவுள்ள நிலையில், சத்திரசிகிச்சையை மேற்கொள்வதா, இல்லையா என்பது குறித்து அதிகம் ஆராயப்பட்டதாகவும், அதன் பின்னர், சத்திரசிகிச்சை மேற்கொள்வதே சிறப்பான முடிவு என முடிவெடுக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்படுகிறது.
உலகின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மிற்சல் ஸ்டார்க்கின் இழப்பு, அத்தொடரில் அவுஸ்திரேலியாவை அதிகமாகப் பாதிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago