2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 06 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சர்வதேச கிரிக்கெட் சபையின் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதிபெற்றுள்ளது.

இங்கிலாந்துக்கெதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என இன்று வென்றதன் மூலமே குறித்த இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதிபெற்றுள்ளது.

அஹமதாபாத்தில் நேற்று முன்தினம் ஆரம்பமான நான்காவது டெஸ்டை இனிங்ஸ் மற்றும் 25 ஓட்டங்களால் இந்தியா வென்றிருந்தது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இங்கிலாந்து

இங்கிலாந்து: 205/10 (துடுப்பாட்டம்: பென் ஸ்டோக்ஸ் 55, டான் லோரன்ஸ் 46, ஒலி போப் 29, ஜொனி பெயார்ஸ்டோ 28 ஓட்டங்கள். பந்துவீச்சு: அக்ஸர் பட்டேல் 4/68, இரவிச்சந்திரன் அஷ்வின் 3/47, மொஹமட் சிராஜ் 2/45, வொஷிங்டன் சுந்தர் 1/14)

இந்தியா: 365/10 (துடுப்பாட்டம்: றிஷப் பண்ட் 101, வொஷிங்டன் சுந்தர் ஆ.இ 96, ரோஹித் ஷர்மா 49, அக்ஸர் பட்டேல் 43, அஜின்கியா ரஹானே 27 ஓட்டங்கள். பந்துவீச்சு: பென் ஸ்டோக்ஸ் 4/89, ஜேம்ஸ் அன்டர்சன் 3/44, ஜேக் லீச் 2/89)

இங்கிலாந்து: 135/10 (துடுப்பாட்டம்: டான் லோரன்ஸ் 50, ஜோ றூட் 30 ஓட்டங்கள். பந்துவீச்சு: இரவிச்சந்திரன் அஷ்வின் 5/47, அக்ஸர் பட்டேல் 5/48)

போட்டியின் நாயகன்: றிஷப் பண்ட்

தொடரின் நாயகன்: இரவிச்சந்திரன் அஷ்வின்

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X