Shanmugan Murugavel / 2025 ஜனவரி 22 , பி.ப. 08:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில் எட்டாமிடத்துக்கு பாகிஸ்தானின் செளட் ஷகீல் முன்னேறியுள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான முதலாவது டெஸ்டில் 86 ஓட்டங்களைப் பெற்றமையைத் தொடர்ந்தே 11ஆம் இடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி எட்டாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
1. ஜோ றூட், 2. ஹரி ப்றூக், 3. கேன் வில்லியம்சன், 4. யஷஸ்வி ஜைஸ்வால், 5. ட்ரெவிஸ் ஹெட், 6. தெம்பா பவுமா, 7. கமிந்து மென்டிஸ், 8. செளட் ஷகீல், 9. ஸ்டீவன் ஸ்மித், 10. றிஷப் பண்ட்.
மேற்படி டெஸ்டில் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பாகிஸ்தானின் நொமன் அலி, பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் 11ஆம் இடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி ஒன்பதாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
1. ஜஸ்பிரிட் பும்ரா, 2. பற் கமின்ஸ், 3. ககிஸோ றபாடா, 4. ஜொஷ் ஹேசில்வூட், 5. மார்கோ ஜன்சன், 6. மற் ஹென்றி, 7. நேதன் லையன், 8. பிரபாத் ஜெயசூரிய, 9. நொமன் அலி, 10. இரவீந்திர ஜடேஜா, ஸ்கொட் போலண்ட்.
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
1. இரவீந்திர ஜடேஜா, 2. மார்கோ ஜன்சன், 3. மெஹிடி ஹஸன் மிராஸ், 4. பற் கமின்ஸ், 5. ஷகிப் அல் ஹஸன்.
50 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
2 hours ago