2025 மே 23, வெள்ளிக்கிழமை

எதிர்காலம் தொடர்பான தெளிவை எதிர்பார்க்கும் சந்திமால்

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 14 , பி.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய அணியில் தனது எதிர்காலம் தொடர்பான தெளிவை இலங்கை கிரிக்கெட் சபையிடமும், அதன் தொழில்நுட்ப செயற்குழுவிடமும் இலங்கையணியின் முன்னாள் தலைவரான தினேஷ் சந்திமால் கோரியுள்ளார்.

தொழில்நுட்பக் குழுவின் தலைவரான முன்னாள் அணித்தலைவர் அரவிந்த டீ சில்வாவுக்கு வரையப்பட்டுள்ள கடிதத்தில், அவரையும், செயற்குழுக்களையும் சந்திப்பதற்கான வாய்ப்பொன்றை 32 வயதான சந்திமால் கோரியுள்ளார்.

செயற்குழுவானது முன்னாள் அணித்தலைவர்கள் குமார் சங்கக்கார, ரொஷான் மஹாநாம, முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனையும் உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த கடிதத்தில் சிறந்த முன்னாள் வீரர்களின் 30 வயதுக்கு முந்தைய தரவுகளுடன்  தனது தரவுகளை சந்திமால் ஒப்பிட்டுக் காட்டியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X