Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 27 , பி.ப. 06:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவர் பதவிக்குப் போட்டியிட எதிர்பார்த்துள்ள பஹ்ரேன் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஷேய்க் சல்மான், தன் மீது நாசகாரப் பொய்கள் ஏவிவிடப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்துக்கு ஆதரவான போராட்டத்தில் கலந்துகொண்ட பஹ்ரேன் மெய்வல்லுநர் வீரர்களை அடையாளங்கண்டு, அவர்களை சிறையிலடைத்து, சித்திரவதைக்குட்படுத்துவதற்குக் காரணமாக அமைந்தார் என்ற குற்றச்சாட்டு, சல்மான் மீது தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
அத்தோடு, பீபா தலைவர் பதவிக்கு அவர் போட்டியிட அனுமதிக்கப்படக் கூடாது என அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன.
எனினும், தன் மீதான குற்றச்சாட்டுகளை நாசகாரப் பொய்கள் எனத் தெரிவித்துள்ள அவர், 'நான் செய்யாததொன்றை, என்னால் மறுக்க முடியாது" எனத் தெரிவித்தார்.
'இவ்வாறான குற்றச்சாட்டுகள், பாதிப்புகளை ஏற்படுத்துவனாக மட்டுமன்றி, அவை மிகவும் காயத்தை ஏற்படுத்துகின்றன. சில நபர்கள், தங்களுக்கான நிகழ்ச்சி நிரலைக் கொண்டுள்ளார்கள்" என அவர் தெரிவித்தார்.
அவற்றைப் பொய்கள் என வர்ணித்த அவர், அப்பொய்கள், தன்னை மாத்திரமன்றி, நாட்டையும் நாட்டு மக்களையும் பாதிக்கின்றன எனத் தெரிவித்தார்.
'இவை தவறான, நாசகாரப் பொய்கள். கடந்த காலங்களிலும் தற்போதும் அவை திரும்பத் திரும்ப சொல்லப்பட்டு வருகின்றன" என்றும் அவர் குறிப்பிட்டார்.
சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவர் செப் பிளட்டர், ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக 90 நாட்களுக்கு இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் பெப்ரவரியோடு பதவி விலகவுள்ளார். எனவே, அவரின் இடத்துக்கான தேர்தல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago