Shanmugan Murugavel / 2021 டிசெம்பர் 06 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக்கில் (எல்.பி.எல்), கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற ஜஃப்னா கிங்ஸுடனான போட்டியில் கோல் கிளாடியேட்டர்ஸ் வென்றது.
நேற்று முன்தினம் ஆரம்பித்த இத்தொடரின் இந்த ஆரம்பப் போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற கிங்ஸின் அணித்தலைவர் திஸர பெரேரா, தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.
அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய கிளாடியேட்டர்ஸ் ஆரம்பத்திலேயே தனுஷ்க குணதிலகவை சுரங்க லக்மாலிடம் வீழ்ந்தது. தொடர்ந்து குறிப்பிட்ட நேரத்தில் குசல் மென்டிஸ், மொஹமட் ஹஃபீஸை ஜேடன் சியல்ஸ், மகேஷ் தீக்ஷனவிடம் அடுத்தடுத்த ஓவர்களில் இழந்தது.
பின்னர் பென் டங்க் குறிப்பிட்ட நேரத்தில் வனிடு ஹஸரங்கவிடம் வீழ்ந்த நிலையில், அணித்தலைவர் பானுக ராஜபக்ஷவின் 56 (31), சமித் பட்டேலின் 42 (31) ஓட்டங்களின் மூலம் இனிங்ஸைக் கட்டமைத்த கிளாடியேட்டர்ஸ் பின்னர் இருவரையும் குறிப்பிட்ட இடைவெளிகளில் ஹஸரங்க, சியல்ஸிடம் இழந்த நிலையில் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 164 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், சியல்ஸ் 4-0-23-3, ஹஸரங்க 4-0-30-2, தீக்ஷன 4-0-21-1, சம்மு ஷான் 1-0-5-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
பதிலுக்கு, 165 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய கிங்ஸ், கட்டுக்கோப்பாக பந்துவீசி மொஹமட் ஹபீஸ் (2), சமித் பட்டேல் (3), லஹிரு மதுஷங்க (1), நூர் அஹ்மட் (1), புலின தரங்க (2), நுவான் துஷாரவிடம் (1) விக்கெட்டுகளைப் பறிகொடுத்த நிலையில், 18.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 110 ஓட்டங்களையே பெற்று 54 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக, சமித் பட்டேல் தெரிவானார்.
14 Apr 2026
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Apr 2026
14 Apr 2026