Editorial / 2018 டிசெம்பர் 20 , பி.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் ஏழாமிடத்துக்கு, அவுஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளர் நேதன் லையன் முன்னேறியுள்ளார்.
முடிவுற்ற இந்தியாவுடனான இரண்டாவது டெஸ்டில் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலமே 14ஆம் இடத்திலிருந்து ஏழு இடங்கள் முன்னேறிய லையன், ஏழாமிடத்தைப் பிடித்துள்ளார்.
இதேவேளை, குறித்த போட்டியில் நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜொஷ் ஹேசில்வூட், 11ஆம் இடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி ஒன்பதாமிடத்தைப் பிடித்துள்ளார்.
அந்தவகையில், முதல் 10 பந்துவீச்சாளர்களில் இந்த இரண்டு மாற்றங்கள் தவிர, ஏழாமிடத்திலிருந்து அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பற் கமின்ஸ், ஓரிடம் கீழிறங்கி எட்டாமிடத்தில் காணப்படுவதுடன், ஒன்பதாமிடத்திலிருந்த யசீர் ஷா ஓரிடம் கீழிறங்கி பத்தாமிடத்தில் காணப்படுகின்றார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

இந்நிலையில், முதல் 10 துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் மாற்றமெதுவும் ஏற்படாத நிலையில், அவுஸ்திரேலியாவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் சதம் பெற்றதன் மூலம் தனது புள்ளிகளை முதலாமிடத்திலுள்ள இந்திய அணியின் தலைவர் விராத் கோலி உயர்த்தியுள்ளதோடு, அதேபோல இலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்டில் அரைச்சதம் பெற்றதன் மூலம் தனது புள்ளிகளை இரண்டாமிடத்திலுள்ள கேன் வில்லியம்சன் உயர்த்தியுள்ளார்.
அந்தவகையில், குறித்த போட்டிகளுக்கு முன்பாக ஏழாகக் காணப்பட்ட புள்ளிகள் வித்தியாசத்தை 19 ஆக கோலி அதிகரித்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
இந்நிலையில், நியூசிலாந்துக்கெதிரான முதலாவது டெஸ்டில் 83, ஆட்டமிழக்காமல் 120 ஓட்டங்களைப் பெற்ற இலங்கையணியின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், 24ஆவது இடத்திலிருந்து எட்டு இடங்கள் முன்னேறி 16ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.
இதேவேளை, குறித்த போட்டியின் இரண்டாவது இனிங்ஸில் ஆட்டமிழக்காமல் 141 ஓட்டங்களைப் பெற்ற குசல் மென்டிஸ், 20ஆம் இடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி 18ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.
11 minute ago
22 minute ago
30 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
22 minute ago
30 minute ago
36 minute ago