Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 04 , பி.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில், உலகின் இரண்டாம் நிலை வீரரான சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர் நான்காவது சுற்றுடன் வெளியேற்றப்பட்டுள்ளார்.
20 கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள பெடரர், நேற்று இடம்பெற்ற உலகின் 55ஆம் நிலை வீரரான அவுஸ்திரேலியாவின் ஜோன் மில்மனுக்கெதிரான தனது நான்காவது சுற்றுப் போட்டியின் முதலாவது செட்டை 6-3 என்ற ரீதியில் வென்றார்.
எனினும், மூன்று மணித்தியாலங்கள் 35 நிமிடங்கள் வரை நீடித்த குறித்த போட்டியின் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது செட்களை 7-5, 7-6 (9-7), 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வென்ற மில்மன் பெடரரை வீழ்த்தி காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
இதேவேளை, நேற்று இடம்பெற்ற பிறிதொரு நான்காவது சுற்றுப் போட்டியில், உலகின் ஆறாம் நிலை வீரரும் 13 தடவைகள் கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவருமான சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச், 6-3, 6-4, 6-3 என்ற நேர் செட்களில் ஜோவா சூஸாவை வென்று காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளார்.
இந்நிலையில், உலகின் ஏழாம் நிலை வீரரான குரோஷியாவின் மரின் சிலிச், நேற்று இடம்பெற்ற தனது நான்காவது சுற்றுப் போட்டியில் 7-6 (8-6), 6-2, 6-4 என்ற நேர் செட்களில் உலகின் 10ஆம் நிலை வீரரான பெல்ஜியத்தின் டேவிட் கொபினை வென்று காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
இதேவேளை, உலகின் முன்னாள் முதல்நிலை வீராங்கனையான ரஷ்யாவின் மரியா ஷரபோவா, நேற்று இடம்பெற்ற தனது நான்காவது சுற்றுப் போட்டியில் 4-6, 3-6 என்ற நேர் செட்களில் ஸ்பெய்னின் கார்லா சுவாரஸ் நவரோவாவிடம் தோற்று தொடரிலிருந்து வெளியேறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago