Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 02 , பி.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் பங்கேற்பதற்காக தடையில்லாச் சான்றிதழை இலங்கை கிரிக்கெட் சபை வழங்குமாறு உத்தரவிடக் கோரி வழக்கொன்றை கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இலங்கையின் வேகப்பந்துவீச்சாளர் நுவான் துஷார வழக்கொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
வழக்கானது வியாழக்கிழமை (02) நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டதுடன் விசாரணைக்காக ஏப்ரல் 9ஆம் திகதிக்கு திகயிடப்பட்டுள்ளது.
வழக்கில் பிரதிவாதிகளாக இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா, செயலாளர் பந்துல திஸாநாயக்க, பொருளாளர் சுஜீவ கொடலியட்டா, பிரதம நிறைவேற்றதிகாரி அஷ்லி டி சில்வா ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் சபையுடனான தனது ஒப்பந்தமானது மார்ச் 31ஆம் திகதி முடிவடைந்ததாகவும் ஒப்பந்தத்தை மீளப் புதுப்பிக்காமல், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகும் தனது எண்ணத்தை கிரிக்கெட் சபைக்கு அறிவித்ததாக துஷார கூறியுள்ளார்.
உடற்றகுதி மட்டங்களை அடையவில்லை எனக் குறிப்பிட்டே துஷாரவுக்கு தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்படாத நிலையில், தேசிய அணிக்கு தெரிவு செய்யப்படப் போவதில்லை எனத் தனக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக துஷார கூறியுள்ளார்.
இதேவேளை தனது விளையாடும் காலம் முழுவதும் தற்போதிருக்கும் உடற்றகுதி மட்டங்களைக் கொண்டிருந்ததாகவும் முன்னைய ஆண்டுகளில் தடையில்லாச் சான்றிதழ் இதற்கு வழங்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
23 minute ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
11 Apr 2026
11 Apr 2026