Shanmugan Murugavel / 2024 மே 26 , பி.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்) கொல்கத்தா நைட் றைடர்ஸ் சம்பியனானது.
சென்னையில் சற்று முன்னர் முடிவுக்கு வந்த சண்றைசர்ஸ் ஹைதரபாத்துடனான இறுதிப் போட்டியில் வென்றே மூன்றாவது முறையாக கொல்கத்தா சம்பியனானது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற சண்றைசர்ஸின் அணித்தலைவர் பற் கமின்ஸ் தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய சண்றைசர்ஸ், மிற்செல் ஸ்டார்க் (2), வைபவ் அரோரா, ஹர்ஷித் ரானா (2), அன்ட்ரே ரஸல் (3), வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைனிடம் வரிசையாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 18.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 113 ஓட்டங்களையே பெற்றது.
பதிலுக்கு 114 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா, வெங்கடேஷ் ஐயரின் ஆட்டமிழக்காத 52 (26), ரஹ்மனுல்லாஹ் குர்பாஸின் 39 (32) ஓட்டங்களோடு 10.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.
13 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
4 hours ago
4 hours ago