Shanmugan Murugavel / 2022 மே 26 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) இரண்டாவது தகுதிகாண் போட்டிக்கு றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் தகுதி பெற்றுள்ளது.
கொல்கத்தாவில் நேற்றிரவு நடைபெற்ற லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸுடனான வெளியேற்றப் போட்டியில் வென்றே இரண்டாவது தகுதிகாண் போட்டிக்கு பெங்களூர் தகுதி பெற்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற சுப்பர் ஜையன்ட்ஸின் அணித்தலைவர் லோகேஷ் ராகுல், தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூர், ரஜாட் பட்டிடாரின் ஆட்டமிழக்காத 112 (54), தினேஷ் கார்த்திக்கின் ஆட்டமிழக்காத 37 (23) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 207 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், மொஹ்சின் கான் 4-0-25-1 என்ற பெறுதியைக் கொண்டிருந்தார்.
பதிலுக்கு 208 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய லோகேஷ் ராகுல் 79 (58), தீபக் ஹூடா 45 (26) ஓட்டங்களைப் பெற்ற நிலையில் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 193 ஓட்டங்களையே பெற்று 14 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. பந்துவீச்சில், ஹர்ஷால் பட்டேல் 4-0-25-1 என்ற பெறுதியைக் கொண்டிருந்தார்.
இப்போட்டியின் நாயகனாக ரஜாட் பட்டிடார் தெரிவானார்.
இந்நிலையில், அஹமதாபாத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள இரண்டாவது தகுதிகாண் போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸை பெங்களூர் எதிர்கொள்ளவுள்ளது.
14 minute ago
25 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
25 minute ago
33 minute ago