Shanmugan Murugavel / 2026 மார்ச் 25 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

மோசமான ஆஷஸ் தொடரைத் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்தும் பொருட்டு இங்கிலாந்தின் துடுப்பாட்டவீரர் பென் டக்கெட், டெல்லி கப்பிட்டல்ஸுடனான இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) ஒப்பந்தத்திலிருந்து விலகியுள்ளார்.
டெல்லிக் குழாமில் இலங்கையின் பதும் நிஸங்கவும் காணப்படுகின்ற நிலையில் ஒருபோதும் ஐ.பி.எல்லில் விளையாடியிருக்காத, இரண்டு கோடி இந்திய ரூபாய்களுக்கு ஏலமெடுக்கப்பட்ட பென் டக்கெட் அணியில் நிச்சயம் இடம்பெறுவார் என உத்தரவாதம் இல்லை என்ற நிலையே காணப்பட்டது.
இந்நிலையில் இறுதி நேரத்தில் ஐ.பி.எல்லிருந்து விலகியமை காரணமாக இரண்டாண்டுத் தடையை டக்கெட் எதிர்கொள்ளவுள்ளார். கடந்தாண்டு டக்கெட்டின் சக வீரரான ஹரி ப்றூக்கும் இவ்வாறு இறுதி நேரத்தில் டெல்லியின் ஒப்பந்தத்திலிருந்து விலகிய நிலையில் தடையை ஐ.பி.எல்லில் எதிர்கொள்கிறார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago