Editorial / 2017 நவம்பர் 07 , பி.ப. 07:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளரான மிற்செல் ஸ்டார்க், முதற் தரப் போட்டியொன்றில் இரண்டு ஹட்-ட்ரிக்குகளைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் உள்ளூர் அணிகளுக்கிடையிலான முதற் தரப் போட்டித் தொடரான ஷெபீல்ட் ஷீல்ட் தொடரில், கடந்த சனிக்கிழமை ஆரம்பித்து நேற்று முன்தினம் முடிவடைந்த மேற்கு அவுஸ்திரேலியாவுக்கெதிரான போட்டியிலேயே, நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக விளையாடிய ஸ்டார்க் குறித்த சாதனையைப் புரிந்துள்ளார்.
அந்தவகையில், ஷெபீல்ட் ஷீல்ட் தொடரில் இவ்வாறாக பந்துவீச்சாளரொருவர் போட்டியொன்றில் இரண்டு ஹட்-ட்ரிக்குகள் பெறுவது இதுவே முதற்தடவையாக அமைந்ததுடன், முதற்தரப் போட்டியொன்றில் இவ்வாறு இடம்பெறும் ஏழாவது சந்தர்ப்பமாக ஸ்டார்க்கின் பெறுபேறு பதிவாகியது.
இப்போட்டியில், மேற்கு அவுஸ்திரேலிய அணியின் முதலாவது இனிங்ஸின் 67ஆவது ஓவரை வீசிய ஸ்டார்க், அந்த ஓவரின் நான்காவது, ஐந்தாவது, ஆறாவது பந்துகளில் முறையே ஜேஸன் பெஹெட்ரோவ், டேவிட் மூடி, சைமன் மக்கின் ஆகியோரின் விக்கெட்டுகளைக் கைப்பற்றி, குறித்த போட்டியில் தனது முதலாவது ஹட்-ட்ரிக்கைக் கைப்பற்றினார்.
பின்னர், மேற்கு அவுஸ்திரேலிய அணியின் இரண்டாவது இனிங்ஸின் 76ஆவது ஓவரை வீசிய ஸ்டார்க், அந்த ஓவரின் ஐந்தாவது, ஆறாவது பந்தில் ஜேஸன் பெஹட்றோவினதும், டேவிட் மூடியினதும் விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, 78ஆவது ஓவரின் முதலாவது பந்தில் ஜோனோ வெல்ஸின் விக்கெட்டைக் கைப்பற்றி, போட்டியின் தனது இரண்டாவது ஹட்-ட்ரிக்கையும் பூர்த்தி செய்தார்.
குறித்த போட்டியில் 171 ஓட்டங்களால் நியூ சவுத் வேல்ஸ் அணி வெற்றிபெற்றிருந்தது.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago