2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்றார் கட்லின்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 04 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்னும் சில வாரங்களில், பிரேஸிலின் றியோ டீ ஜெனீரோவில் ஆரம்பிக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான, ஐக்கிய அமெரிக்காவின் தகுதிகாண் போட்டிகளில், 100 மீற்றரில், வருடத்தின் அதிசிறந்த நேரப்பெறுதியை அமெரிக்க குறுந்தூர ஓட்ட வீரரான ஜஸ்டின் கட்லின் பெற்றுள்ளார்,

2012ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியத்தின் இலண்டனில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கத்தை பெற்ற 34 வயதான கட்லின், முதற்தடவையாக ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ள 20 வயதான ட்ரெய்டோன் பொம்மெல்லைத் தோற்கடித்து, 9.80 செக்கன்களில் தனது பந்தயத் தூரத்தை கடந்தார்.

இதேவேளை, ஜமைக்கா ஒலிம்பிக் தகுதிகாண் போட்டிகளின் 200 மீற்றரில், போட்டித் தூரத்தை 20.29 செக்கன்களில் கடந்து, யொஹான் பிளேக் வெற்றி பெற்றுள்ளார். 2012ஆம் ஆண்டு இலண்டன் ஒலிம்பிக் போட்டிகளின்போது 19.44 செக்கன்களில் 200 மீற்றரை ஓடி இரண்டாமிடம் பெற்ற பின்னர், பிளேக்கின் சிறந்த நேரப் பெறுதி இதுவாகும்.

பின் தொடை தசைநார் கிழிவினால், 100 மீற்றர் அரையிறுதிப் போட்டிகளுடன், உலகின் வேகமான மனிதனான உசைன் போல்ட், தகுதிகாண் போட்டிகளிலிருந்து வெளியேற வேண்டி ஏற்பட்டது.

இந்நிலையில், குறித்த 100 மீற்றர் தகுதிகாண் போட்டிகளிலும் வெற்றி பெற்ற பிளேக், றியோவில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து போல்ட்டை வெளியேற்றும் அளவுக்கு காயம் தீவிரமானது அல்ல எனத் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .