Shanmugan Murugavel / 2021 ஏப்ரல் 19 , மு.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவில் இவ்வாண்டு இறுதியில் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில் விளையாட தென்னாபிரிக்காவின் முன்னாள் அணித்தலைவர் ஏ.பி டி வில்லியர்ஸ் ஆர்வமாயுள்ளதுடன், தென்னாபிரிக்காவின் பயிற்சியாளர் மார்க் பெளச்சருடன் இந்தியன் பிறீமியர் லீக்கின்போது கலந்துரையாடவுள்ளார்.
இது தொடர்பாக ஏற்கெனவே பெளச்சருடன் கலந்துரையாடியதாகத் தெரிவித்த கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற டி வில்லியர்ஸ், ஆர்வமாயுள்ளீர்களான என பெளச்சர் கடந்தாண்டு வினவியதாகவும், தான் நிச்சயமாக எனப் பதிலளித்ததாகக் கூறியுள்ளார்.
டி வில்லியர்ஸ் தயாராகவிருந்தால், அவரது பிரசன்னம் தென்னாபிரிக்காவை பலமாக்கினால் அவர் தெரிவு செய்யப்படுவார் என பெளச்சர் தெரிவித்திருந்தார்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் 2019ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ணத் தொடருக்கு மீள்வருகையொன்றை புரிய டி வில்லியர்ஸ் தயாராகியிருந்தபோதும், அணி முகாமைத்துவம் அதை நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
17 Apr 2026
17 Apr 2026
17 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
17 Apr 2026
17 Apr 2026
17 Apr 2026