Editorial / 2026 மார்ச் 29 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, சர்வதேச டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, நீண்ட இடைவெளிகளுக்கு மத்தியிலும் தன்னை எப்படி உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தயார் நிலையில் வைத்திருக்கிறார் என்பது குறித்து மனம் திறந்துள்ளார்.
கடந்த 15 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்த கோலி, பரபரப்பான போட்டி அட்டவணைகள் காரணமாகத் தான் எதிர்கொண்ட சவால்களைப் பகிர்ந்து கொண்டார்.
"கடந்த 15 ஆண்டுகளில் நான் விளையாடிய கிரிக்கெட் போட்டிகளின் எண்ணிக்கையை ஒப்பிடுகையில், போட்டிப் பயிற்சி இல்லாததை விட, மன அழுத்தமே (Mental Stress) எனக்கு எப்போதும் ஒரு பெரிய கவலையாக இருந்தது."
தொடர்ச்சியான ஆட்டங்களுக்கு மத்தியில் கிடைக்கும் ஓய்வு நேரங்கள் தன்னை மீண்டும் ஊக்கப்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.
"இந்த இடைவெளிகள் எனக்குப் பெரிதும் உதவியுள்ளன; அவை என்னை எப்போதும் புத்துணர்ச்சியுடனும், புதிய உத்வேகத்துடனும் வைத்திருக்க உதவுகின்றன. நான் எப்போது இந்திய அணிக்குத் திரும்பினாலும், எனது 120 சதவீத உழைப்பைக் கொடுப்பேன். ஏனெனில், முறையான தயார்படுத்தல்கள் இன்றி நான் ஒருபோதும் மைதானத்திற்குள் நுழைவதில்லை."
ஒரு வீரராகத் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொள்வதை விட, அணிக்காக முழுமையாகப் பங்களிப்பதையே தான் விரும்புவதாகக் கோலி குறிப்பிட்டுள்ளார்.
"கூடுதல் ஓய்வு என்னை மனதளவில் புத்துணர்ச்சியடையச் செய்கிறது. நீங்கள் உடல் தகுதியுடனும், மனதளவில் உற்சாகத்துடனும் இருக்கும்போது எல்லாம் இயல்பாகவே சரியாக அமைந்துவிடும். ஒரு வீரராகத் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு, அணிக்காக முழு முயற்சியை வெளிப்படுத்துவதே எனது முதன்மை நோக்கம்."
2 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago