Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 16 , மு.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
அடுத்த வருட ஒலிம்பிக் போட்டிகளையடுத்து ஓய்வு பெறும் நோக்கம் இல்லையென பதினேழு தடவை தனிநபர் கிரான்ட்ஸ்லாம் சம்பியனான தரவரிசையில் உலகின் மூன்றாம் நிலை வீரரான சுவிட்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர் தெரிவித்துள்ளார்.
பிரேசிலின் ரியோவில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின்போது 35 வயதைத் தொடவுள்ள பெடரர், அங்கு தனிநபர்ப் போட்டிகளிலும் கலப்பு இரட்டையர் போட்டிகளிலும் பங்கேற்கவுள்ளார். எனினும் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் பங்கேற்பது குறித்து அவர் இதுவரை முடிவு செய்யவில்லை.
இந்நிலையிலேயே, 2016ஆம் ஆண்டு முழுவதுக்கும் திட்டமிட்டுள்ளதாகவும், ரியோ ஒலிம்பிக்குக்கும் அதற்கு அங்காலும் எனத் தெரிவித்த பெடரர், இதுவரைக்கும் ஓய்வு பெறும் எண்ணம் இல்லையெனவும் குறிப்பிட்ட ஒரு திகதி தன்னிடம் இல்லையெனவும் அதுவே திட்டமிடுதலை இலகுவாக்கின்றது எனவும் தெரிவித்தார்.
அவுஸ்திரேலிய பகிரங்கப் போட்டியே தனக்கு உண்மையாக பெரிய இலக்காக இருப்பதாகவும் அதற்கப்பால் நீண்ட கடினமான வருடம் எனவும் தெரிவித்தார். நான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் உடற்றகுதியில் தான் சிறப்பாக இருப்பதாக உணருவதாகவும் தான் பல தடவைகள் கூறுவது போன்று நான் இன்னும் சில காலத்துக்கு தொடரில் இருப்பேன் என நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago