Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 10 , பி.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய அணியின் முன்னாள் தலைவர் சௌரவ் கங்குலியின் பதவிகள் குறித்துச் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. முரண்பாடுகளை ஏற்படுத்தக்கூடிய பதவிகளை வகிப்பதாகவே, அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைத் தலைவராகவும், அச்சபையால் நடாத்தப்படும் இந்தியன் பிறீமியர் லீக் தொடரில் பங்குபற்றும் அணியான சென்னை சுப்பர் கிங்ஸ் அணியையும் என். ஸ்ரீனிவாசன் காணப்பட்டமையால், இந்திய கிரிக்கெட்டில் முரண்பாடான பதவிகளை வகித்தலென்பது அதிகக் கவனத்தை ஈர்த்திருந்தது. அதுவே, ஸ்ரீனிவாசனின் பதவியிழப்புக்கும் முக்கிய காரணமாகியிருந்தது.
இந்நிலையில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பூனே ஐ.பி.எல் அணியை உரிமைப்படுத்தியுள்ள நியூ றைஸிங் குழுமத்துடன் வியாபாரத் தொடர்புகளை வைத்திருப்பதே, கங்குலிக்கான சிக்கலாக அமைந்துள்ளது.
கால்பந்தாட்டக் கழகமான அத்லெட்டிகோ டி கொல்கத்தா என்ற அணியை, கங்குலியும் நியூ றைஸிங் குழுமத்தின் தலைவர் சஞ்சீவ் கோங்காவும் இணைந்து உரிமைப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், இந்தியன் பிறீமியர் லீக் தொடரின் ஆளும் சபையிலும் கங்குலி இடம்பெற்றுள்ளதால், முரண்பாடுகளை ஏற்படுத்தக்கூடிய பதவிகளை அவர் வகிப்பதாக, குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago