Editorial / 2026 மே 10 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

பூ.லின்ரன்
36ஆவது தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை முன்னிட்டு, யாழ்ப்பாண மாவட்ட இளைஞர் கழகங்களுக்கு இடையிலான கடற்கரை கரப்பந்து (Beach Volleyball) போட்டிகள் அண்மையில் வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் மிகவும் உற்சாகமாக நடைபெற்றன.
யாழ். மாவட்டத்தின் பல்வேறு பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த சிறந்த அணிகள் பங்குபற்றிய இப்போட்டிகளில், வீர வீராங்கனைகள் தமது அபார திறமைகளை வெளிப்படுத்தினர்.
பெண்கள் பிரிவு முடிவுகள்:
பெண்கள் பிரிவிற்கான இறுதிப் போட்டியில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய கரவெட்டி பிரதேச இளைஞர் அணி முதலாம் இடத்தைப் பிடித்துச் சம்பியன் பட்டத்தை வென்றது. அவர்களுக்கு ஈடுகொடுத்து விளையாடிய பருத்தித்துறை பிரதேச இளைஞர் அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.
ஆண்கள் பிரிவு முடிவுகள்:
ஆண்கள் பிரிவில் நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் கோப்பாய் பிரதேச இளைஞர் அணி முதலாம் இடத்தைப் பெற்று வெற்றி வாகை சூடியது. இப்போட்டியில் கடும் சவாலை ஏற்படுத்திய பருத்தித்துறை பிரதேச இளைஞர் அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.
மாவட்ட மட்டத்தில் வெற்றி பெற்ற இந்த அணிகள், அடுத்ததாக நடைபெறவுள்ள மாகாண மற்றும் தேசிய மட்டப் போட்டிகளில் யாழ். மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago